குடும்பஸ்தன் முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை; தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் ஈர்க்கும் குடும்ப கதைகள்!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஃபீல் குட் ஃபேமிலி டிராமா வகை திரைப்படங்கள் அதிக கவனம் ஈர்த்து வருகின்றனர். அத்தகைய படங்களின் தொகுப்பை இந்த குறிப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஃபீல் குட் ஃபேமிலி டிராமா வகை திரைப்படங்கள் அதிக கவனம் ஈர்த்து வருகின்றனர். அத்தகைய படங்களின் தொகுப்பை இந்த குறிப்பில் பார்க்கலாம்.
சினிமாவில் குறிப்பிட்ட வகையான படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி வருவது வழக்கம். இதைத் தொடர்ந்து, அதே கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகும். அதன்படி, தற்போது குடும்ப கதைகள் சார்ந்த திரைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
2/5
அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'குடும்பஸ்தன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் குழுவினர் இணைந்து எடுத்த இப்படம், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவை பாணியில் திரையில் காண்பித்ததது.
3/5
இந்த ஆண்டு வெளியானதில் பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது 'டூரிஸ்ட் ஃபேமிலி'-ஆக இருக்கும். அந்த அளவிற்கு இப்படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இலங்கையில் இருந்து அகதியாக வரும் குடும்பத்தினரை கொண்டு ஃபீல் குட் பாணியில் இப்படத்தை எடுத்திருந்தனர்.
Advertisment
4/5
இந்த வரிசையில் '3BHK' திரைப்படம் சமீபத்திய வரவாக இணைந்துள்ளது. சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவை சுமந்து நிற்கும் மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் வலியை பிரதிபலிக்கும் இப்படமும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
5/5
இந்த படங்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது 'குட் நைட்' திரைப்படம் என்று கூறலாம். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான இப்படம், நாயக பிம்பமின்றி இயல்பான கதைக்களத்தைக் கொண்டு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.