சிறுநீரக தொற்று இருக்கா? வேற எந்த ஜூஸும் குடிக்க வேணாம்; இது ஒண்ணு மட்டும் போதும்: டாக்டர் ராஜலட்சுமி டிப்ஸ்
நாம் என்ன சாப்பிட்டாலும், என்ன குடித்தாலும் அது சிறுநீர் மற்றும் மலத்தின் வழு=இயங்க தான் வெளியேறும். அதற்க்கு ஏற்ற ஒரு பணத்தை பற்றி டாக்டர் ராஜலட்சுமி பேசியுள்ளார்.
நாம் என்ன சாப்பிட்டாலும், என்ன குடித்தாலும் அது சிறுநீர் மற்றும் மலத்தின் வழு=இயங்க தான் வெளியேறும். அதற்க்கு ஏற்ற ஒரு பணத்தை பற்றி டாக்டர் ராஜலட்சுமி பேசியுள்ளார்.
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள அழுக்கு மற்றும் திரவங்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாகும். இது தவிர, சிறுநீரகம் மனித உடலில் உப்பு, பொட்டாசியம் மற்றும் அமிலத்தின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதனுடன், நமது உடலின் மற்ற பாகங்கள் செயல்படத் தேவையான சில ஹார்மோன்களும் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறுகின்றன.
2/8
தினமும் 2 எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால், சிறுநீர் சிட்ரேட் அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
3/8
அதே சமயம், தினமும் 2 முதல் 2.5 லிட்டர் வரை சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் இந்த பானத்தை காலை மற்றும் மதியம் குடிக்கலாம்.
Advertisment
4/8
எலுமிச்சையில் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது, இது உகந்த எலும்பு அடர்த்தியை பராமரிக்க முக்கியமானது. எலுமிச்சை நீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம். இது பலரின் ஃபேவரெட்டான பானம்.
5/8
சிறுநீரக நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும், எதைக் குடிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. அந்த வகையில் சிறுநீரக நோயாளிகள் எலுமிச்சை நீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் உள்ளது.
6/8
இரத்தத்தில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகம் செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துவதிலும், கிரியேட்டினின் மற்றும் யூரிக் அமிலம் போன்ற இரசாயனங்களின் அளவைப் பராமரிப்பதிலும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Advertisment
Advertisements
7/8
நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது உங்கள் சிறுநீரகங்களால் உங்கள் இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவது ஆகும். அதாவது நச்சுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கட்டமைக்கப்படுகின்றன. இது பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
8/8
வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீரை குடிப்பதால் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news