திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் 1500 மகளிர் கூடி 60 வகையான கோலங்கள் போட்டும், 25 வகையான பொங்கல் வைத்தும் உலக சாதனை படைத்தனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு அயப்பாக்கத்தில் உள்ள அண்ணா பூங்காவில் ஊராட்சி பிரதிநிதிகளின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 1500 பெண்கள் ஒன்று கூடி 25 வகையான பொங்கலை ஐந்து கிலோ எடை கொண்ட 25 பானைகளில் சமைத்தனர். அத்துடன் கோலப் போட்டியில் 33 நிமிடங்களில் 60 வகையான பிரம்மாண்ட கோலங்களை போட்டு அசத்தினர்.
விவசாயிகளை போற்றும் வகையில் 'விவசாயம் காப்போம்' என்ற வடிவில் பெண்கள் அனைவரும் அணிவகுத்து நின்றனர். இந்த நிகழ்வு சர்வதேச பிரைட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கோலப்போட்டி, பொங்கல் வைத்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“