ஆண்டில் வரும் 3 அமாவாசை தினங்கள் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது.
2/5
இந்த அமாவாசை தினங்கங்களில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது என்றும் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் என்றும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
3/5
அந்த வகையில், இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளில் நீர்நிலை சென்று சிராத்தப் பண்டங்களை வழங்கி எள்ளும் நீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யலாம்.
Advertisment
4/5
இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். முப்பழம், உளுந்து, காய், கிழங்கு ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
5/5
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுப்பது சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news