தைவான் நாட்டு பெண்ணை கோவையைச் சேர்ந்த பொறியாளர் தமிழ் முறைப்படி மேளம் கொட்டி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
வெளிநாட்டு பெண்ணை தமிழ் முறைப்படி மேளம் கொட்ட தாலி கட்டி கரம் பிடித்து கோவையை சேர்ந்த சுற்று சூழல் பாதுகாப்பு பொறியாளர் திருமணம் செய்து கொண்டார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி சுப்பிரமணியம் விஜயலட்சுமி ஆகியோர் மகன் கே.எஸ். வைஷ்ணவ்ராஜ், இவர் சிங்கப்பூரில் சுற்றுசூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தைவான் நாட்டில் எம்.எஸ் படித்து அங்கு வேலை பார்த்து வந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த "ஜிம்மி சாங் மிக்கி வாங்" தம்பதியரின் மகள் "கிளாடியா சாங்" (தற்போது ஆசிரியாக பணி புரிகிறார்) என்பவருடன் சமூக சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இது தொடர்பாக இருவரும் தங்கள் பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்தனர்.பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய உள்ள நடைமுறைகளை செய்து, திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் சொந்த ஊரில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
மங்கள வாத்தியத்துடன் மணமக்கள் வேட்டி சேலை மாலை அணிந்து வேதம் முழங்க தாலிக்கயிற்றை மணமகள் கழுத்தில் மணமகன் கட்டினார்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தைவான் நாட்டில் இருந்து பெண்ணின் உறவினர்கள் நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், இரவு விருந்து தமிழர் உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
இது பற்றி மணமக்கள் கூறும் போது ஒருவருக்கொருவர் சமூக சேவை பணியில் ஈடுபட்ட போது நடத்தை மற்றும் பழகும் முறை பிடித்து இருந்ததால் விரும்பினோம் என்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“