ஒரு கப் ஜவ்வரிசி, கொஞ்சுண்டு வெந்நீர்... டிரஸ் அயர்ன் பண்ணுற காசு மிச்சம்; இப்படி செஞ்சு பாருங்க!
காட்டன் துணிகளை துவைத்தபின் அவைகளை அயர் செய்வது ரொம்ப கடினமாக இருக்கிறதா இதோ உங்களுக்குதான் இந்த டிப்ஸ். ஒரு கப் ஜவ்வரிசி, 2 கப் தண்ணீரில் காய்ச்சி, கொஞ்சுண்டு வெந்நீர் கலந்தால் போதும் உங்கள் டிரஸ் அயர்ன் பண்ண துணி போல பளபளனு மின்னும்.
ஒரு கப் ஜவ்வரிசி, 2 கப் தண்ணீரில் காய்ச்சி, கொஞ்சுண்டு வெந்நீர் கலந்தால் போதும் உங்கள் டிரஸ் அயர்ன் பண்ண துணி போல பளபளனு மின்னும். அதை எப்படி செய்வது என்று இங்கே கூறுகிறோம்.
காட்டன் துணிகளை துவைத்தபின் அவைகளை அயர் செய்வது ரொம்ப கடினமாக இருக்கிறதா இதோ உங்களுக்குதான் இந்த டிப்ஸ். ஒரு கப் ஜவ்வரிசி, 2 கப் தண்ணீரில் காய்ச்சி, கொஞ்சுண்டு வெந்நீர் கலந்தால் போதும் உங்கள் டிரஸ் அயர்ன் பண்ண துணி போல பளபளனு மின்னும். அதை எப்படி செய்வது என்று இங்கே கூறுகிறோம்.
Advertisment
பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது, வெயில் காலத்தில் காட்டன் ஆடைகளை அணிவதுதான் நல்லது. ஆனால், இந்த காட்டன் துணிகளை வாஷிங் மெஷினில் எளிதாக துவைத்துவிடலாம் என்றாலும் துவைத்தபின், அவற்றை அயர்ன் செய்வது பெரிய வேலை. கடைகளில் கொடுத்து அயர் செய்தால் பணமும் செலவாகும்.
அதனால், காட்டண் துணிகளை துவைத்த பின், 2 கப் தண்ணீரில் காய்ச்சி, கொஞ்சுண்டு வெந்நீர் கலந்தால் போதும் உங்கள் டிரஸ் அயர்ன் பண்ண துணி போல பளபளனு மின்னும். இந்தியன் ரெசிபிஸ் கிச்சன் டிப்ஸ் (Indian Recipes Kitchen Tips) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளதை செய்து பாருங்கள்.
Advertisment
Advertisements
முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி காய்ச்சினால், 2 நிமிடத்தில் அந்த ஜவ்வரிசி ஜெல் போல திக்காக வரும். இந்த நேரத்தில் ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட வேண்டும். பின்னர் கொதிக்க வைத்த ஜவ்வரிசியை எடுத்து வடிகட்டி ஜவ்வரிசியை மட்டும் தனியாக எத்துக்கொள்ளுங்கள். பிறகு, வடிகட்டியை கொழகொழ என்ற ஜெல்போன்றதை மட்டும் ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஜவ்வரிசி ஜெல் 1 மாதம் முதல் 3 மாதம் வரை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
இப்போது இந்த ஜவ்வரிசி ஜெல் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்க்கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சமாக கம்ஃபோர் சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்காமல் இருந்தால் பரவாயில்லை. சேர்த்தால் நன்றாக இருக்கும். இப்போது இதனுடன் கொஞ்சம் சுடுதண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் ரொம்ப சூடாக இருக்க வேண்டாம். கொஞ்சம் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். நன்றாகக் கலக்கிவிடுங்கள். இப்போது நாம் துவைத்து வைத்துள்ள காட்டன் துணி, காட்டன் புடவை, புதுசா வாங்கிய பட்டு சேலை இது எல்லாவற்றையும் நனைத்து முடித்த பிறகு, ஹேங்கரில் காய் வைத்துவிடுங்கள். அவ்வளவுதான், இப்போது துணிகள் பளபளனு புதுசு மாதிரி இருக்கும். அயர்ன் செய்கிற காசு மிச்சம். ட்ரை பண்ணி பாருங்கள்.