Advertisment

உங்க வயதுக்கு உரிய சுகர் அளவு எவ்வளவு? மூத்த குடிமக்களுக்கு இதில் சலுகை!

சிறியவர் முதல் பெரியவர் வரை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனை இதுதான்..

author-image
WebDesk
New Update
HBA1C test

கட்டாயம் தேவை எச்.பி.ஏ.ஒன்.சி சோதனை

உங்கள் வயதுக்குரிய சர்க்கரை அளவு என்ன அதனை அறிய என்ன மாதிரியான பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை பற்றி மருத்துவர்கள் கூறுவது என்ன என்று நாம் இன்று பார்ப்போம்.

Advertisment

நம் உடலில் சாதாரணமாகவே சர்க்கரையின் அளவு என்பது 24 மணி நேரம் மாறிக்கொண்டே இருக்கும். இதில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு என பல வித்தியாசங்கள் உண்டு. சர்க்கரை இல்லாதவர்களுக்கு அளவு 80 லிருந்து 140-க்குள் மாறுபடும். ஆனால் சர்க்கரை இருப்பவர்களுக்கு பல மடங்கு பல அளவுகளில் மாற வாய்ப்புள்ளது.

அதனால்தான் சர்க்கரையின் அளவை அறியவும் நிர்ணயிக்கவும் எச்.பி.ஏ.ஒன்.சி(HbA1c) என்ற சோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை இந்த சோதனையை எடுப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவில் உள்ள ஏற்ற இறக்கத்தையும் அளவையும்  கண்டறியலாம். ஒவ்வொரு மனிதருக்கும் இந்த எச்.பி.ஏ.ஒன்.சி(HbA1c) அளவு மாறுபடும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு நிர்ணயிக்கப்படும். எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்க்கரை இருப்பவர்களுக்கு வயதிற்கு தகுந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்க்கரை உள்ள  6 வயதிற்குள் இருப்பவர்களுக்கு 8. 5% , 6-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 8%,  12 - 19 வரை உள்ளவர்களுக்கு 7.5%, இருக்க வேண்டும். 

20 - 45 வயது உள்ளவர்களுக்கு 6.5% சக்கறை அளவு உள்ளது.  46 லிருந்து 70 வயது உள்ளவர்களுக்கு 7% ஆக இருக்க வேண்டும். 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 8.5%க்குள் இருக்க வேண்டும். வாழ்வியல் நாட்களை கணக்கிட்டு இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது.

சிறு வயது உள்ளவர்களின் வாழ்வியல் சூழலை கருத்தில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வயதானவர்களுக்கு அதிக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐம்பது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதலாக வேறு பிரச்சனையும் இருக்கும். குறிப்பாக இதயக்கோளாறு இது மாதிரியான சிறுசிறு பிரச்சனைகள் இருக்கும் அவர்களுக்கு குறைந்த அளவிலான சுகர் அதாவது லோ சுகர் இருக்கக்கூடாது. அதனால் இலக்கு அதிகமாக வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல வயதானவர்களுக்கு சர்க்கரை அளவு குறைந்து லோ சுகர் ஆகி கீழே விழுந்து விட்டாலும் அவர்களுக்கு எலும்புகளில் அடிப்பட வாய்ப்புள்ளது இதுவும் ஒரு காரணம் அவர்களின் சர்க்கரை அளவு இலக்கு அதிகமாக வைத்திருப்பதற்கு. சிறிய குழந்தைகள், பெரியவர்கள் அதாவது மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்களுக்கு அதிக அளவில் சர்க்கரையின் அளவு இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது அவர்களின் உடல்நிலைகளையும் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை வைத்தும் அவர்களை சுற்றி உள்ளவர்களை கருத்தில் கொண்டும் அவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரவர் வயதில் அதாவது 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 6.5 %கடைபிடிக்க வேண்டும். இந்த வயதில் இருப்பவர்களுக்கு அடிக்கடி லோ சுகர் பிரச்சனை வருகிறது என்றால் இந்த இலக்கை மாற்றலாம். அதுவும் மருத்துவரின் பரிசோதனை மற்றும் பரிந்துரையின்படி மாற்ற வேண்டும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Diabetes Doctor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment