சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு எது என்ற கேள்விக்கு, மிகவும் எளிமையான ஒரு உதாரணத்துடன் டாக்டர் அருண்குமார் விளக்கியுள்ளார். 4 தோசை சாப்பிடுபவர்கள் இனி இப்படி சாப்பிடுங்க என்று சுகர் கண்ட்ரோலுக்கு டாக்டர் அருண்குமார் சூப்பர் யோசனை கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. சர்க்கரையைக் கட்டுப்படுத்த உணவுக்கட்டுப்பாடு, உணவுமுறை ரொம்ப முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுமுறை என்றால், எந்த உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவு சாப்பிடக்கூடாது என்ற பெரிய சந்தேகம் சந்தேகம் வந்துவிடுகிறது. அதே போல, உணவை எப்படி, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானதாக உள்ளது.
இப்படி சர்க்கரை நோயாளிகளின் சந்தேகங்களுக்கு டாக்டர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு எது என்ற கேள்விக்கு, மிகவும் எளிமையான ஒரு உதாரணத்துடன் டாக்டர் அருண்குமார் விளக்கியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு எது என்ற கேள்விக்கு, டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், “உங்களுக்கு எளிமையாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் வேகமாக தீப்பற்றி எரியுமா? அல்லது மரம் வேகமாக தீப்பற்றி எரியுமா என்றால், பெட்ரோல்தான் வேகமாக தீப்பற்றி எரியும். இப்போது ஒரு உதாரணத்துக்கு, பெட்ரோல் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று வைத்துக்கொள்ளலாம்.
இப்போது அடுத்த கேள்வி, ஒரு சொட்டு பெட்ரோல் பயங்கரமாக எரியுமா? அல்லது ஒரு லாரி மரக்கட்டை பயனங்கரமாக எரியுமா என்றால், ஒரு லாரி மரக்கட்டைதான் பயங்கரமாக எரியும். இங்கே வேகமாக தீப்பற்றி எரியும் தன்மை மட்டும் முக்கியம் இல்லை, மொத்த எரிபொருள் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியம்.
அதனால், இப்போது நாம் எடுக்கும் உணவு கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கிறதா என்பது மட்டும் முக்கிய விசஷயம் இல்லை, நாம் எவ்வளவு மாவுச் சத்து எடுக்கிறோம் என்பது முக்கியம். இதைதான் நாம் கிளைசெமிக் லோடு என்கிறோம். கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகளில் நாம் ஃபுல்லா பிஸ்கட், பரோட்டா, சாதாரண பிரியாணிக்கு பதில் சிறுதானிய பிரியாணி, சப்பாத்தி என்றால் 5 சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருந்தாலும், சாப்பிடுகிற லோடு ரொம்ப அதிகம். அதனால், நீங்கள், ஒரு சொட்டு பெட்ரோல், லாரி மரக்கட்டை இதில் எது பயங்கரமாக எரியும் என்கிற உதாரணத்தைத்தான் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனால், எந்த மாவுச் சத்து சாப்பிட்டாலும், குறைவான அளவு மாவுச் சத்து சாப்பிட வேண்டும். நீங்கள் வழக்கமாக 4 தோசை சாப்பிடுவீர்கள் என்றால், அதற்கு பதில், 2 தோசை சாப்பிடுங்கள், அதன்கூட 2 ஆம்லெட் சாப்பிடலாம். அதனால், நீங்கள் எந்த அளவுக்கு மாவுச் சத்தைக் குறைத்துவிட்டு, புரதச் சத்து கொழுப்புச் சத்து எடுத்துக்கொண்டு, காய்கறிகளை அதிகப்படுத்தினால், அந்த அளவுக்கு சர்க்கரை நன்றாக கட்டுப்படும்” என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.