சுகர் எரிக்க இதுதான் ஈசி வழி; கைகளை இப்படி சுத்தினாப் போதும் : டாக்டர் கார்த்திகேயன்
உடலில் உள்ள சர்க்கரையை எரிக்க கைகளைச் சுற்றி செய்யப்படும் மிகவும் எளிமையான ஒரு உடற்பயிற்சியை டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார். மேலும், இப்படி கைகளைச் சுற்றுவஹன் மூலம் 60 தசைகள் இயக்கப்படுவதாகக் கூறுகிறார்.

சர்க்கரையை எரிக்க கைகளைச் சுற்றி மிகவும் எளிமையான ஒரு உடற்பயிற்சியை செய்தால் போதும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

Advertisment
சர்க்கரையை எரிக்க கைகளைச் சுற்றி மிகவும் எளிமையான ஒரு உடற்பயிற்சியை செய்தால் போதும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
சர்க்கரை நோய் தேசிய வியாதி என்று சொல்கிற அளவுக்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு மாற்றம், மரபு ரீதியாக என பல காரணங்களால் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டால், உணவுக் கட்டுப்பாடு, நடைபயிற்சி, உடற்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம். ஆனால், பலரும் உணவுக் கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. இதனால், சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காகவே டாக்டர் கார்த்திகேயன் கைகளைச் சுற்றி செய்கிற ஒரு எளிமையான உடற்பயிற்சியை சொல்கிறார்.
Advertisment
Advertisements
முதலில் உங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி சுற்றுங்கள். இப்படி மெதுவாக 10 முறை சுற்றுங்கள். இப்படி கைகள் மற்றும் தோள்பட்டையை சுழற்றுவதன் மூலமாக 60 தசைகளை இயக்குகிறோம். இதன் மூலமாக ஏகப்பட்ட சர்க்கரை எரிக்கப்படும். அதனால், 10 முறை தோள்பட்டை மற்றும் கைகளைச் சுற்றிவிட்டு 5 முறை ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். பிறகு, மீண்டும் 10 முறை தோள்பட்டை மற்றும் கைகளைச் சுற்றுங்கள். இப்படி 5 செட் செய்யுங்கள். நல்ல பலன் அளிக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.