இந்தியாவில் 11 பேரில் 1 நபருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5-ல் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சர்க்கரை நோய் எண்ணிக்கையில், முதல் இடத்துக்கு தமிழ்நாடும் கர்நாடகாவும் போட்டிபோட்டுக்கொண்டிருப்பதாக டாக்டர் பால் கூறுகிறார்.
சர்க்கரை வியாதி என்பது தேசிய வியாதி என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் அபாயத்தால் இளம் வயது மாரடைப்பைத் தடுக்க உணவு பழக்கத்தை மாற்றுங்கள் என்று டாக்டர் பால் கூறியுள்ளார்.
Advertisment
இந்தியாவில் 11 பேரில் 1 நபருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5-ல் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சர்க்கரை நோய் எண்ணிக்கையில், முதல் இடத்துக்கு தமிழ்நாடும் கர்நாடகாவும் போட்டிபோட்டுக்கொண்டிருப்பதாக டாக்டர் பால் கூறுகிறார்.
சர்க்கரை வியாதி 2 வகையாக இருக்கின்றன. இதில் முதல் வகை சர்க்கரை நோய் மரபு ரீதியாக வருகின்றன. இவர்களுக்கு இன்சுலின் சுரக்காததால் இன்சுலின் கொடுக்கப்படுகிறது.
2வது வகை சர்க்கரை நோய் என்பது இன்சுலின் நன்றாக சுரக்கிறது, ஆனால், சரியான உணவு முறை இல்லாததால் இன்சுலின் வேலை செய்யாது. இதில் 2-வது வகை சர்க்கரை நோய் பற்றி டாக்டர் பால் கூறியுள்ளார்.
Advertisment
Advertisement
நம்முடைய உடலில் உள்ள இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை சிறப்பாக செயல்பட செல்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த செல்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதுதான் நாம் உண்ணும் உணவுகள். நாம் சாப்பிடும் உணவுகளை கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு என்று பிரித்து அனுப்புகிறது. ஆனால், செல்கள் போதும் போதும் வேண்டாம் என்கிற அளவுக்கு கார்போஹைட்ரேட் தருகிறபோது, அவற்றை கொழுப்பாக வயிற்றுப் பகுதியில் சேர்த்து வைக்கிறது. இந்த இன்சுலின் வேலை செய்யாமல் போய், இன்சுலின் சுரப்பது கம்மியாகி உடலில் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றை பாதித்து கடைசியாகை இதயத்தை பாதித்து மாரடைப்பு ஏற்படும்.
அதற்கு செல்களை வேலை செய்ய வைக்க வேண்டும். செல்கள் வேலை செய்தால் அது சுகர் லெவலைக் குறைக்கும்.
அதற்கு நாம் அளவுக்கு அதிகமான சுகர் அளவு, கார்போஹைட்ரேட் அளவை கம்மி பண்ண வேண்டும். அதற்கு, சாப்பாட்டைக் குறைக்க வேண்டும். அதனால், அளவாக சாப்பிட வேண்டும். குளுகோஸை குறைக்க விரதம் இருக்க வேண்டும் என்று டாக்டர் பால் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.