ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நீரேற்றம் முக்கியமானது. ஆனால், ‘சரியாக’ தண்ணீர் குடிப்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏனென்றால், உணவைப் போலவே, தண்ணீரும் கூட உடலில் அதன் தாக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், என்று உணவியல் நிபுணர் சிம்ரன் வோஹ்ரா கூறுகிறார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது எப்படி எடை இழப்புக்கு உதவும் என்பதை அவர் விளக்கினார்.
*விழித்தவுடன் இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர்
*வொர்க்அவுட்டிற்கு 1 மணி நேரத்திற்கு முன், இரண்டு கிளாஸ் தண்ணீர்
* வொர்க்அவுட்டின் 30 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு கிளாஸ் தண்ணீர்
*உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன், இரண்டு கிளாஸ் தண்ணீர்
*சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு, இரண்டு கிளாஸ் எலுமிச்சை தண்ணீர்
ஆனால் இந்த முறை கூடுதல் கிலோவை அகற்ற உதவுமா என்று உணவியல் நிபுணர் ஜினல் படேலிடம் கேட்டோம். (Zynova Shalby Hospital)
தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் அளவை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல், வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சூடான நீர் உடனடியாக தீர்க்கிறது, இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. வெதுவெதுப்பான நீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வலியைக் குறைக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது, எடை இழப்புக்கு போதுமான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
ஆனால், தண்ணீர் குடிப்பதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது.
இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பல்வேறு காரணிகள் எடை இழப்புக்கு வழிவகுக்கும், என்று படேல் வலியுறுத்தினார்.
எடை அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்வது பயனுள்ள முடிவுகளுக்குத் தகுந்த திட்டத்தைக் கொண்டு வர உதவும்.
பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ்டு செய்யப்பட்ட ஜங்க ஃபுட் உணவுகளை உண்ணுதல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, மரபியல், உடல் இயக்கம் இல்லாமை மற்றும் சில மருந்துகள் போன்ற காரணிகள் உங்கள் எடை இழப்பை பாதிக்கலாம்.
அதிக வேலை நேரங்களைக் கொண்ட பரபரப்பான வாழ்க்கை முறை, உடல் எடையை அதிகரிப்பதன் விளைவாக, உடல் இயக்கத்தை பராமரிப்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது. நாள் முழுவதும் அடிக்கடி இடைவெளி எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து உணவுகளை விட ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட ஜங்க் உணவைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும், என்று படேல் குறிப்பிட்டார்.
வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெலிந்த புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட நன்கு சமச்சீர் உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,
தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகும் உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லை என்றால், உணவு நிபுணரை அணுகுவது உதவியாக இருக்கும்.
உங்கள் உணவியல் நிபுணர் உங்கள் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எடை அதிகரிப்பதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பார். அதைக் கண்டறிந்த பிறகு, அதிகபட்ச புரத உட்கொள்ளலை உறுதி செய்வதற்காக சுகாதார நிலைமைகள், ஒவ்வாமை மற்றும் உணவு விருப்பத்தேர்வுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பொருத்தமான உணவுத் திட்டத்தை உருவாக்கலாம், என்று படேல் கூறினார்.
மேலும், பயனுள்ள முடிவுகளுக்கு நிபுணர் பரிந்துரைத்த உணவுத் திட்டத்தை கண்டிப்பாக பின்பற்றுவது தனிநபர்களின் கடமையாகிறது.
Read in English: Can drinking two glasses of water after waking up, and before workouts help you lose weight?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.