நாம் அனைவரும் பளபளப்பான, வலுவான முடிக்கு ஆசைப்படுகிறோம். ஆனால் அதை ஒரே இரவில் அடைய முடியாது. அதற்கு ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், மேலும் முடி எப்போதும் நீரேற்றமாகவும், எல்லா நேரங்களிலும் ஊட்டமளிப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும்
தோல் மருத்துவர் நிதி சிங் டாண்டன் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும், அதன் கண்டிஷனிங் பண்புகளுடன் இன்னும் ஆரோக்கியமாக மாற்றும் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்ய விரும்புகிறேன், என்று டாண்டன் கூறினார்.
தேவையான பொருட்கள்
2-3 டீஸ்பூன் – வெந்தயம், இரவு முழுவதும் ஊறவைத்தது 2-3 தேக்கரண்டி – தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் பாதி – தயிர்
செய்முறை
ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும். தேங்காய் எண்ணெய், தயிர் சேர்த்து கலக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
உங்கள் உச்சந்தலையிலும் முடி வேர் முதல் நுனி வரை தடவவும். 20-30 நிமிடங்கள் வைத்திருந்து, வழக்கமான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கழுவவும். வலுவான முடிக்கு இந்த ஹேர் மாஸ்க் கண்டிப்பா டிரை பண்ணுங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.