வீட்டில் இருக்கக் கூடிய பழைய துணிகளை தூக்கிப் போட மனசில்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைதிருக்கிறீர்களா தையல் மிஷின் வேண்டாம், ஊசி, நூல் போதும், பழைய துணியில் வட்ட வட்டமா தலகாணி இப்படி ரெடி பண்ணுங்க.
பலரும் தங்கள் வீடுகளில் இருக்கும் அழகான பழைய துணிகளை, இல்லாதவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். அல்லது தலையணை செய்வார்கள். ஆனால், அதற்கு அவர்கள் அதை தைப்பதற்கு தையல் மிஷின் தேவை. இதற்காக தையல் கடைக்கும் போக முடியாது. அதனால், பழைய துணிகளைக் கொண்டு தையல் மிஷின் இல்லாமலே, ஊசி நூல் மட்டும்போதும், வட்டமான, அழகான ஒரு தலகாணி செய்யலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதை லாவன்ஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் சொல்லியிருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
முதலில் ஒரு தடிமனான நூல், ஊசி, கத்திரிக்கோல் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பழைய துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு டிசர்ட் எடுத்து உள்பக்கம் வெளியே வெரும்படி முழுவதுமாக திருப்பி வைத்து, பரப்பிக் கொள்ளுங்கள். இப்போது டி சர்ட்டின் இரு கைகளுக்கு இடையே நூலை எடுத்து நன்றாகக் கட்டி முடிச்சு போட்டு விடுங்கள். இப்போது டிசர்ட்டை திருப்பினால், ஒரு பை போல இருக்கும். அதில் வட்டமாக பழைய துணிகளை அடுக்குங்கள். மேல் பகுதியில், பழைய டவல் இருந்தால் மடித்து வையுங்கள். இப்போது பை போன்ற டிசர்ட்டின் அடிப்பகுதி விளிம்பு இருக்கும் இல்லையா, அது மடித்து தைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு 3 தையலைப் பிரித்துவிட்டு, சேஃப்டி பின் மூலம் அதில் நூல் நுழைத்து நாடா போல கோர்த்து மறுமுனையில் எடுங்கள். இப்போது, அந்த நூலை இறுக்குங்கள். மூடி ஒரு வட்டமான தலகாணி வடிவம் கிடைக்கும். ஆனாலும், சிறிது ஓட்டை இருக்கும். அதை அடைப்பதற்கு ஒரு நல்ல கலரில் இரண்டு உள்ளங்க் கை அலகத்துக்கு வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் துணிகளை வைத்து ஒரு பட்டன் போல சுருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை தலகாணியின் ஓட்டையில் வைத்து பட்டன் வடிவ திரட்சி மேலே தெரியும்படி தைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான், பழைய துணையில் அழகான, வட்டமான, சூப்பரான தலகாணி ரெடி. உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.