Advertisment

ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடம்பு கூலிங் ஆகுமா? மருத்துவ நிபுணர் சொல்வது என்ன?

நாம் சாப்பிடும் சுவையான ஐஸ்கிரீம், உங்களை குளிர்விப்பதற்கு பதிலாக உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ice cream

What happens to your body when you cycle for 30 minutes every day?

வெளியில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் உள்ளே இருக்கும் வெப்பத்தைத் தணிக்க குளிர்ச்சியான விருந்துகளுக்குத் திரும்புகிறோம்.
அப்படி நாம் சாப்பிடும் சுவையான ஐஸ்கிரீம், உங்களை குளிர்விப்பதற்கு பதிலாக உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? 
நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது, குறிப்பாக அதிக பால் கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட ஐஸ்கிரீமை உட்கொள்ளும் போது, உணவினால் தூண்டப்பட்ட தெர்மோஜெனீசிஸ் (thermo genesis) எனப்படும் ஒரு செயல்முறை உடலில் ஏற்படுகிறது. இந்த செயல்முறை உணவின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகும் வெப்பத்தைக் குறிக்கிறது, என்று உணவியல் நிபுணர் ரியா தேசாய் விளக்கினார். (senior dietitian, Wockhardt Hospitals, Mira Road, Mumbai)
ஐஸ்கிரீமில் காணப்படும் பால் கொழுப்பு போன்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் அல்லது புரதங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. 
இதன் விளைவாக, கொழுப்புகள் வளர்சிதை மாற்றமடையும் போது, அவை அதிக வெப்பத்தை வெளியிடுகின்றன மற்றும் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன. 

Advertisment

body temperature

கனடாவின் மவுண்ட் செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழகத்தில் உணவு ஆய்வாளர் டாக்டர் போடன் லுஹோவியின் 2019 ஆய்வு கூட அறிவியலை விளக்கியது.
பெரும்பாலான ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் முக்கிய பொருட்கள் பால் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகும். உடலில் கொழுப்பு உடைக்கப்படும்போது, அது குறிப்பிடத்தக்க அளவு வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த செயல்முறை diet-induced thermogenesis என்று அழைக்கப்படுகிறது. 
மற்ற ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடுகையில், கொழுப்புகள் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கின்றன, எனவே உடலில் வெப்பத்தை வெளியிடும் திறன் உள்ளது" என்று ஆய்வில் டாக்டர் லுஹோவி குறிப்பிட்டார்.
எனவே அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த ஐஸ்கிரீமை உண்ணும் போது, அது உங்கள் உடல் வெப்பநிலையை தற்காலிகமாக உயர்த்தக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மோர், எலுமிச்சை சாறு, நன்னாரி, இளநீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் உடலை குளிர்விப்பது நல்லது, இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தர்பூசணி போன்ற பழங்களையும், முலாம்பழம் அல்லது வெள்ளரி போன்ற நீரேற்றும் காய்கறிகளையும் முயற்சி செய்யலாம், என்று நிபுணர் கூறினார்.
Read in English: No, ice creams do not cool you down — they raise body temperature!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment