1976 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேக்கரால் சென்னையிலுள்ள முதலை பண்ணை, 8.5 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய முதலை பண்ணையாகவும் திகழ்கிறது.
மெட்ராஸ் முதலை வங்கியில் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் நான்கு மாதங்களுக்கு முன்பே நிதி இல்லாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: மெட்ராஸ் க்ரோகடைல் பார்க்கில், பார்வையாளர்களுக்கான வெறிச்சோடிய நுழைவாயில்.
நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், ”எங்கள் மூத்த ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10% முதல் 50% வரை தாமாக முன் வந்து, ஊதியத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர்” என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: முதலை பண்ணையில் இருக்கும் முதலைகள்.
மெட்ராஸ் முதலை பண்ணைக்கு அருகிலுள்ள முதலை வடிவ நுழைவாயில் தான் நீங்கள் படத்தில் காண்பது. மகாபலிபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது க்ரோகோடைல் பார்க் மூடப்பட்டுள்ளது.
2,000 க்கும் மேற்பட்ட முதலைகள், ஆமைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள் போன்ற ஊர்வனவற்றையும் இந்த பண்ணை கொண்டுள்ளது. படம்: பண்ணையின் பராமரிப்பாளர்கள் தங்கள் வளாகத்தில் உள்ள முதலைகளுக்கு உணவளிக்கின்றனர்.
சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள இந்த முதலை பண்ணையில் வருடந்தோறும் சுமார் 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் மார்ச் 16-ம் தேதி முதல் இந்த பண்ணை மூடப்பட்டுள்ளது, தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. படம்: மெட்ராஸ் முதலை பண்ணையில், ஒரு முதலையின் முகம், பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook