மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை நாளை மகாளய அமாவாசை என்று சிறப்புக்குரியதாக இந்துக்கள் வணங்குகின்றனர். இந்த நாளில் வழிபாடு செய்வதற்காக பலரும் புனித தலமான ராமேஸ்வரம் மற்றும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா அக்டோபர் 4-ம் தேதி முதல் நடைபெற உள்ளதால் திருப்பதிக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
மகாளய அமாவாசை மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், ராமேஸ்வரம் மற்றும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
“அக்டோபர் 2 (புதன்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் இதன்படி வருகின்ற 02/10/2024 அன்று மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
இதன் அடிப்படையில் வருகின்ற 01/10/2024 செவ்வாய்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 02/10/2024 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது”
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
“இந்த வருடம் 2024-ல் திருப்பதி திருமலையில் "பிரம்மோத்ஸவம்" திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 30/09/2024 முதல் 13/10/2024 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.
மகாளய அமாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.