ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரம்மாண்டமான சிவனாலயம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி அன்று ஒவ்வொரு சிவன் ஆலயத்திலும் அன்ன அபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோன்று இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ராஜேந்திர சோழர் கட்டிய கங்கைகொண்ட சோழமூர்த்தி சிவனுக்கு அன்னபிஷேகம் நடந்தது.
ஒரு டன் அரிசி கொண்டு மிக நவீன முறையில் குக்கரில் வேகவைத்து சாதம் வடிக்கப்பட்டு, சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதற்காக காஞ்சி மடத்தில் இருந்து நன்கொடையாக அரிசி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்தும் அன்னபிஷேகத்திற்காக நன்கொடை அரிசி வாங்கப்பட்டது.
இப்படி, பொதுமக்கள் கொடுத்த அரிசியும் காஞ்சி மடம் கொடுத்த அரிசியும் என சுமார் 1000 கிலோ அரிசியை வேக வைக்கப்பட்டு சாதமாக மாலை சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும், அதன் பின்பு சாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதற்காக காஞ்சிபுரம் மடத்திலிருந்து சுமார் 50 மேற்பட்டவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் துணை கொண்டு ஆன்மீகப் பணியை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“