வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருக பலவிதமான காரியங்களில் ஈடுபடுவோம். அதன்படி, குறிப்பிட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம் செல்வம் அதிகரித்து, அதிர்ஷ்டம் தேடி வந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப் படுகிறது. அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பன்னீர் ரோஜா
பன்னீர் ரோஜா மகாலட்சுமிக்கு உகந்த மலர். இதனை வீட்டின் முன்பு வளர்க்க வேண்டும். இதில் இருந்து வீசும் மனம் நேர்மறை ஆற்றலை அளிக்கும்.
மல்லிகைப் பூ
எல்லோருக்கும் பிடித்தமானது மல்லிகை மலர். பவள மல்லி, அடுக்கு மல்லி என எந்த வகையான மல்லியையும் வீட்டில் வளர்த்தல் நன்மை பெருகும் எனக் கூறப்படுகிறது.
செம்பருத்திச் செடி
ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்கள் கூட செம்பருத்தி வளர்த்தால், அவர்களுக்கு ஆன்மிக ஆற்றல் உருவாகும் எனக் கருதப்படுகிறது. இதனை வளர்ப்பதாலும் நேர்மறை ஆற்றல் உருவாகும்.
இட்லிபூச் செடி
இட்லிப்பூ நமக்கு வெற்றியை தேடி தரும் என நம்பப்டுகிறது. இதனை சிலர் வெற்றிப் பூச்செடி எனவும் அழைப்பார்கள்.
கற்றாழை
வீட்டின் நிலை வாசலுக்கு மேல் கற்றாழையை மாட்டி வைத்திருப்போம். கற்றாழை இருந்தால் தீய சக்திகள் வராது எனவும், கண் திருஷ்டி நீங்கும் எனவும் கூறப்படுகிறது.
மணி ப்ளேன்ட்
இதனை வீட்டின் உள்ளே வைத்து வளர்க்க வேண்டும். வீட்டிற்குள் தென்கிழக்கு பகுதியில் மணி ப்ளேன்டை வளர்த்தால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“