அந்த மனசுதான் சார்... நரிக்குறவர் இன குழந்தைகளுடன் புதுச்சேரி சபாநாயகர் தீபாவளி கொண்டாட்டம்!

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் இன குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சபாநாயகர் செல்வம் தீபாவளியை கொண்டாடினார்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் இன குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சபாநாயகர் செல்வம் தீபாவளியை கொண்டாடினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry Legislative Assembly Speaker R Selvam celebrating diwali with Narikuravar childrens tamil news

புதுச்சேரியில் நரிக்குறவர் இன குழந்தைகளுடன் சபாநாயகர் செல்வம் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் இன குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சபாநாயகர் செல்வம் தீபாவளியை கொண்டாடினார். இங்குள்ள குழந்தைகளுக்கு அவர்  இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், பட்டாசு மற்றும் புத்தாடைகளை சபாநாயகர் வழங்கினார்.

Advertisment

இதனை தொடர்ந்து குழந்தைகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.  அரசியல் தலைவர்களும் வர்த்தக பிரமுகர்களும் இது போன்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்..

நரிக்குறவை இனத்தை சேர்ந்த தங்களது குடும்பத்தில்  தீபாவளி கொண்டாட்டம் என்பது தனியாக கிடையாது. வீடுகளில் தங்களது பெற்றோர் யாசகம் எடுத்து வந்த பட்டாசு மற்றும் இனிப்புகளை கொண்டு தான் கொண்டாடி வருவோம் என கூறும்  இந்த நரிக்குற இனத்துப் பிள்ளைகள் இந்த தீபாவளியை இந்த காப்பகத்தில் நல்ல உணவு,சட்டை ,நல்ல கல்வியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம்." என்று அவர் கூறினார் 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: