பக்தர்கள் தரிசனம் தொடர்பாகவும், மூத்த குடிமக்கள் சலுகைகள் தொடர்பாகவும் வெளியாகி வரும் பொய்யான தகவல்களுக்கு விளக்கம் அளித்து திருப்பதி தேவஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் முக்கிய தலங்களில் ஒன்று திருப்பதி. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி வருகின்றனர்.
திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிக்களுக்கு பல சலுகைள் வழங்கப்படுகிறது.
அதே சமயம் அவ்வப்போது திருப்பதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக பல பொய்யான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக வைத்து்ளது.
அந்த வகையில் தற்போது முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு தரிசனம் செய்வது தொடர்பாக பரப்பப்படும் போலியான மற்றும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மீண்டும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 1000 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் புக்கிங் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு முன்பே, மாதமும் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது.
சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் வைத்திருப்பவருக்கு ரூ.50 மதிப்புள்ள இலவச லட்டு வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசன டிக்கெட்டுக்காக விண்ணப்பித்தவர்கள், திருமலையில் திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள மூத்த குடிமக்கள்/பிஎச்சி லைன் வழியாக தினமும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இது குறித்து சரியான தகவல்களுக்கு www.tirumala.org, https://ttdevastanams.ap.in ஆகிய இணையதளங்களுக்குச் செல்லுமாறு பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD ) கேட்டுக்கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.