நாம் வீட்டில் இருக்கு போது ஓய்வு நேரத்திலோ அல்லது டிவி பார்க்கும்போதோ ஸ்னாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். அதிலும் ஆபீஸ் செல்லும் நபர்கள், ஸ்கூல் செல்லும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்பும்போது சாப்பிடுதற்கு என்ன ஸ்னாக்ஸ் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே வருவார்கள். அந்த வகையில் மாலையில் சாப்பிடுவதற்கு ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் முட்டைக்கோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 1 பெரியது
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 5
காஷ்மீரி மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 3 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கான்ஃப்ளர் மாவு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்னரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 பருப்பு
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் முட்டைக்கோஸை நன்றாக கட் செய்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும். அதில், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய்தூள், மிளகு தூள், சீரகத்தூள், ஆகியவற்றை கலந்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
உப்பு சேர்த்தவுடன், முட்டைகோஸில் இருந்து தண்ணீர் வந்துவிடும் என்தால் இதில் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸ் செய்து, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், உடைத்த முந்திரி பருப்பு, கறிவேப்பிலையை நன்றாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, கடலை மாவு, அரிசி மாவு, கான்ஃபிளர் மாவு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். அதன்பிறகு இறுதியாக அதில் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து 5 நிமிடங்கள் தனியாக வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பான் வைத்து கடலை எண்ணை ஊற்றி, எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் முட்டைக்கோஸ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பொறிக்கவும். பொறிக்கும்போது அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்க்கவும்.
சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி. மாலை நேரத்தில் பொழுதுபோக்காக சாப்பிட இந்த பக்கோடா சூப்பராக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“