விஜயலாய சோழீஸ்வரம்
புதுக்கோட்டை நர்த்தமலையில் உள்ள விஜயலாய சோழீஸவரம் கோவில் கட்டடக் கலைக்கு புதிய அடையாளமாக உள்ளது. இது சோழர் காலத்தின் மணி மகுடத்தை அலங்கரீக்கும் சிறப்பு வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும்.
கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தை முதலாம் ராஜேந்திர சோழன் கட்டினார். தஞ்சை பெரியக்கோவில் போன்று இதுவொரு மாபெரும் அதிசயம்.
ஐராவதீஸ்வரர் கோவில்
கும்பகோணத்தில் உள்ள இந்தக் கோவில் யூனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும். சோழர் கால இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
திங்களூர் கைலாசநாதர் கோவில்
சந்திர கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திங்களூர் கைலாசநாதர் கோவில் சிறந்த கட்டடக் கலைக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாகும்.
தஞ்சாவூர் பெரிய கோவில்
1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் சிவாலயமான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
வரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இவரின் ஆட்சிக்காலத்தில் சிறந்த நிர்வாகம் காணப்பட்டது. இன்றைய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் வாக்குப்பதிவை, 1000 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் சோழர்கள் கடைப்பிடித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.