இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக லட்டு ஒன்று ரூ.50-க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.