'வேர்களை தேடி' குமரி வந்த அயலக தமிழ் மாணவர்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்பு
தமிழக அரசின் வேர்களை தேடி என்ற திட்டத்தில், வெளிநாடுகளில் வாழும், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்கள், தமிழக அரசின் செலவில் வரவழைக்கப்பட்டு, தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

2/5
தற்போது வேர்களைத் தேடி திட்டத்தில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இலங்கை, மலேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பல தலைமுறைக்கு முன் குடி புகுந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் 100 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
3/5
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு துறையில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,குமரி ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,குமரி மாவட்டம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் அயலக தமிழ் மாணவர்களை வரவேற்றனர்.
Advertisment
4/5
அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவர்களை படகின் வாசலில் நின்று வாழ்த்தி திருவள்ளுவர் சிலை பாறைக்கு அனுப்பிவைத்தார்.
5/5
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“