/indian-express-tamil/media/media_files/2025/05/14/9xRJc1Or4ipnqUeKoyAd.jpg)
Madurai Chithirai Festival photos
/indian-express-tamil/media/media_files/2025/05/14/chithirai-festival-photos-788095.jpeg)
மதுரையின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஶ்ரீ கள்ளழகர் இராமராய மண்டபத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு தரிசன வைபவம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/05/14/vWHF8pA0sNd2ttOv5qVi.jpeg)
திரளான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து அழகரின் பல்வேறு அவதாரங்களை கண்டு பரவசமடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/14/fkUssQcvAPCddOFzR0EE.jpeg)
அவதார வரிசையில், அருள்மிகு கள்ளழகர் முதலில் மச்ச அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/14/uzYpNd1mckDAgyh9XZFv.jpeg)
தொடர்ந்து, கூர்ம அவதாரம், வாமன அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் மற்றும் இறுதியாக மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/14/nOiHa2nUM7lqYm4Oj5tp.jpeg)
ஒவ்வொரு அவதாரத்திலும், அழகரின் தெய்வீக எழிலும், அலங்காரத்தின் வனப்பும் பக்தர்களை மெய்மறக்கச் செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.