OTT: 40 வருசத்துக்கு முன் நடந்த கொலை... போலீஸ் அதிகாரி ஆசிப் கண்டுபிடித்தது எப்படி? பரபர த்ரில்லர்!
2024 மே 3ஆம் தேதி தொடங்கிய இந்த படத்துடைய ஷூட்டிங் ஜூலை 15ஆம் தேதி மிக குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த படத்துடைய டைட்டிலை ஆகஸ்ட் 13 அன்று அறிவித்தனர்.
2024 மே 3ஆம் தேதி தொடங்கிய இந்த படத்துடைய ஷூட்டிங் ஜூலை 15ஆம் தேதி மிக குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த படத்துடைய டைட்டிலை ஆகஸ்ட் 13 அன்று அறிவித்தனர்.
திரில்லர் ஜெனரே சேர்ந்த ரெக்கச்சிதரம் திரைப்படம் ஐ.எம்.டி.பி- யில் 8.6 பாயிண்டுகளை பெற்றிருப்பது இந்த படம் எவ்வளவு தரமானது என்பதை காட்டுவதாக உள்ளது.
2/6
காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என பல ஜேனர்கள் இருந்தாலும் திரில்லர் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுத்து வருகின்றன. திரில்லர் படங்கள் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை எளிதாக ஈர்த்து விடும். அந்த வகையில் மலையாள திரைப்படம் திரையரங்குகளில் சூப்பர் ஹிட்டானது.
3/6
இந்த திரைப்படம் தியேட்டர் ரிலீஸில் மட்டும் 55 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மலையாள படத்திற்கு இந்த வசூல் தொகை மிகவும் அதிகமாகும். இந்த படத்தை ஜோவின் சாக்கோ இயக்கியிருந்தார். காவியா ஃபிலிம் கம்பெனி மற்றும் ஆன் மேகா மீடியா இணைந்து தயாரித்த இந்த படத்தில் ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தனர்.
Advertisment
4/6
மம்மூட்டி, மனோஜ் கே ஜெயன், சித்தீக், ஜெகதீஷ், சாய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் கௌரவ தோற்றத்தில் இடம்பெற்று இருந்தார்கள். 40 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு கொலை வழக்கை காவல்துறை அதிகாரி ஆசிப் அலி தீர்த்து வைக்கிறார். இந்த ஒன் லைன் கதையை மிகவும் விறுவிறுப்பான திரை கதையாக ரேகா சித்திரம் படத்தில் ரசிகர்களுக்கு படக்குழுவினர் விருந்து படைத்துள்ளனர்.
5/6
அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று பிரஃகு வெளியானது. தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது.
6/6
தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் ஓடிடி ரிலீஸில் தவற விட்டு விட வேண்டாம் என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news