பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கங்கள் (2020 டோக்கியோவில் தங்கம், 2024 பாரிஸில் வெள்ளி) வென்ற முதல் இந்தியர் ஆனார்.
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மனு பாக்கர். 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போல் கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
நீரஜ் சோப்ரா - மனு பாக்கர் ஆகிய இருவரும் பாரிஸில் பொதுவெளியில் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் மட்டுமே அவர்கள் இருவரும் பேசிய நிலையில், சமூக வலைதளங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவியது.
மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் பேசிய வீடியோவில், அவர் தனது தலையில் நீரஜ் சோப்ராவின் கைகளை வைத்து ஆசிர்வாதம் வாங்குவது போன்று செய்தார். மேலும் நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோக்களை வைத்து நீரஜ் சோப்ரா - மனு பாக்கர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியது.
"மனு இன்னும் மிகவும் இளமையாக இருக்கிறார். அவருக்கு திருமண வயது கூட ஆகவில்லை. மனுவின் தாய் நீரஜ் சோப்ராவை தனது மகனாகவே கருதுகிறார்" என்று மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் மனு பாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.