/indian-express-tamil/media/media_files/2024/10/29/CnzH4ugE03cdDu8BHlXT.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/t214za1jq8pp76SHuiGS.png)
ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம்பருப்பை சேர்த்து ஊறவைக்கவும். இவைகள் வடையின் மேல்புறத்தை பொருமொருப்பாக அதிக நேரம் வைத்துக் கொள்ளும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/nCtXegF48Diw2hpg7VZG.jpg)
இரண்டு தேக்கரண்டி உளுந்தம்ப்பருப்பை தனியாக ஊறவைத்துக் கொள்ளவும், இது அரைத்த மாவில் கலப்பதற்கு.இவை மாவு ஒன்றாக ஒட்டாமல் விலகி இருக்க உதவிடும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/yERAKVKSQqAsjEoBDw2f.jpg)
ஊறிய பருப்பை மைய்ய அரைக்காமல் கொஞ்சம் சொரசொரப்பாக அரைக்கவும்,இவ்வாறு அரைப்பதால் வடை ஒரே சீராக வேகும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/VxeciC4q9Wetfuphwunu.jpg)
பிறகு அதில் உப்பையும் ஒரு சிட்டிகை சோடாவையும் போட்டு நன்கு கலக்கவும்.சோடா உப்பு போடுவதால் வடை ஆறினாலும் கெட்டியாகாமல் மெதுவாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/06/SCDyLgufkJtRCWFfx0ZD.jpg)
பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தனியாக ஊறவைத்துள்ள பருப்பையும் சேர்த்து கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/04/hsyYS6HbReBPnZ5DxrNL.jpg)
கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/11/vUARMAiJiIp9FQdIE6Jw.jpg)
சட்டியின் அளவிற்க்கு ஏற்ப்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/15/EMQU0NEP6J1syEBkJtgH.jpg)
ஆனால் நம்மில் சிலருக்கு மாவின் பாதத்தை பார்ப்பதற்கு தெரியாது தான். அதை செக் செய்வதற்கு ஒரு சிம்பிள் டிப் இதோ!
/indian-express-tamil/media/media_files/2024/10/16/nfuqA2CicpYXBAq3doBw.jpg)
மாவை நன்கு கலந்த பின்பு ஒரு பட்டாணி அளவிற்கு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு பார்க்க வேண்டும். அப்படி போடும் போது அது மிதக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/B06vCqqcfMQ8WV4PoHdf.jpg)
இந்த பதத்தில் மாவு இருக்கும் போது வடை சுட்டால் அது நன்கு மொறுமொறுப்பாக வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.