2024 ஆம் ஆண்டிற்கான தென் ஆப்ரிக்க அழகி பட்டத்தை 28 வயதான மியா லீ ரூக்ஸ் தட்டிச் சென்றார்.
இதன்மூலம் இப்பட்டத்தை பெறும் முதல் காது கேளாத பெண் என்ற சாதனையை மியா படைத்துள்ளார்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என அழகு ராணி பட்டத்தை வென்ற மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது.
இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சைக்கு பிறகுதான் மியா முதல் வார்த்தையை பேசினார்.
மியா தற்போது மாடல் மற்றும் மார்கெட்டிங் மேனஜராகவும் உள்ளார்.
நான் ஒரு தென்னாப்பிரிக்க செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன், ஒதுக்கப்படுவதால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
எல்லைகளை தகர்த்து எறிவதற்காக நான் பூமிக்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். அது இன்று நிஜமாகிவிட்டது, என்று மியா லீ ரூக்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க அழகி பட்டத்தை வென்ற மியாவுக்கு தற்போது உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.