/indian-express-tamil/media/media_files/2024/10/21/UvUFV6soGrxoDQQwpS9c.jpg)
/indian-express-tamil/media/media_files/4t6xUNSa11kv4PBC1Yd0.jpg)
வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/TsBRqggNWCzS9Iw4gGlD.jpg)
ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
/indian-express-tamil/media/media_files/HnuapYDjoMWZ7HPvt5Nx.jpg)
உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது.
/indian-express-tamil/media/media_files/lnV9p77R9uuhs120MeYo.jpg)
எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/Z9MmnQbjCLkholTO0Apz.jpg)
காலை நேரத்தில் செய்யப்படும் யோகாவுடன் ஒப்பிடும்போது, மாலை செய்வதில் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்றால், நீங்கள் நாள் முழுவதும் இயங்கிய பிறகு யோகா செய்வதால் உங்கள் உடல் தீவிர யோகாவில் ஈடுபட தயாராக இருக்கும். இதனால் யோகா ஆசனங்களை நீங்கள் கூடுதலாக செய்யலாம் மற்றும் தீவிரமான ஸ்ட்ரச் யோகா பயிற்சகளில் ஈடுபடுவதையும் நோக்கமாக கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/QkOmegOfYfcfqTQDcVBR.jpg)
மாலை நேரத்து யோகாவை காலை நேரத்து யோகாவிலிருந்து வேறுபடுத்தும் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள் நிதானமாக உணரவும், இரவில் நல்ல தூக்கத்தை பெறவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/r9OslIhqIkvMM13ADWcf.jpg)
நீங்கள் காலை அல்லது மாலை எந்த நேரத்தில் யோகா செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது! நீங்களே முடிவு செய்யலாம், நீங்கள் அதிகாலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கும் நபர் காலை நேரத்தில் யோகா செய்வது உங்களுக்கு சரியானதாக இருக்கலாம். அதே காலை தாமதமாக தூங்கி எழுபவர் அல்லது காலை எழுந்ததுமே அதிக வேலை உள்ள நபர் என்றால் உங்களுக்கு மாலை நேரத்தில் யோகா செய்வது சரியானதாக இருக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/JiyepFQCP3kwLkgBs6g5.jpg)
எனவே முதலில் ஒரு வாரத்திற்கு காலை மற்றும் மாலை என 2 வேளைகளிலும் யோகா பயிற்சிகளை முயற்சி செய்து பாருங்கள், எது உங்களை நன்றாக உணர வைக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து, பின் குறிப்பிட்ட நேரத்தில் யோகா செய்வதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.