அலிகா ஷ்மிட்
ஜெர்மனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான அலிகா ஷ்மிட் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். அவரது அணி தகுதிச் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், சமூக வலைதளத்தில் அதிகம் கவனம் ஈர்த்த வீராங்களில் முதண்மையானவராக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் நபர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
இவா ஸ்வோபோதா
போலந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை இவா ஸ்வோபோதா. இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x100மீ தொடர் ஓட்டத்தில் களமாடினார். அவரது அணி 5-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் களமாடிய இவா அரையிறுதியில் 4வது இடம் பிடித்து வெளியேறினார்.
லுவானா அலோன்சோ
பராகுவே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ. 20 வயதான இவர் தனது "குறைவான ஆடை மற்றும் பிற விளையாட்டு வீரர்களுடன் பழகுவது" போன்றவற்றால் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த மற்ற போட்டியாளர்கள் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனால், அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது ஓய்வை அறிவித்தார். பாரிஸில் 100 மீட்டர் பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அவர் 6வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அலிஷா நியூமன்
கனடாவைச் சேர்ந்த தடகள வீரங்கனையான அலிஷா நியூமன் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார். 4.85 மீட்டர் உயரத்தை அவர் தாண்டிய பிறகு அவரது செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன்
அமெரிக்க தடை தாண்டி ஓட்டப் போட்டி வீராங்கனையான சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன், பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். அவர் பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் ஒரு தங்கமும், பெண்களுக்கான 4x400 மீ தடை தாண்டி தொடர் ஓட்டத்தில் மற்றொரு தங்கமும் வென்றார். தனிநபரை பிரிவில் 400 மீட்டர் தூரத்தை 50.37 நொடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.