/indian-express-tamil/media/media_files/2025/09/22/mr-radha-wife-geetha-radha-passed-away-2025-09-22-14-39-24.jpg)
MR Radha wife Geetha Radha passed away
/indian-express-tamil/media/media_files/2025/09/22/geetha-radha-2025-09-22-15-34-18.jpg)
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மூன்றாவது மனைவியும், பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா, தனது 86-வது வயதில் காலமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/meena-2025-09-22-15-34-34.jpg)
நடிகவேள் எம்.ஆர்.ராதா மூன்று மனைவிகளை மணந்தவர். அவருக்கு 12 குழந்தைகள்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/geetha-radha-2025-09-22-15-34-47.jpg)
இவர்களில் நான்கு மகன்கள் (எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராஜு, மோகன்) மற்றும் எட்டு மகள்கள் (ராஷ்யா, ராணி, ரத்திகலா, கனவல்லி, கஸ்தூரி, ராஜேஸ்வரி, ராதிகா சரத்குமார், நிரோஷா) அடங்குவர்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/niro-2025-09-22-15-35-00.jpg)
கீதா ராதா குடும்ப வாழ்க்கையிலும், சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் பொதுவெளியில் அதிகம் காணப்படாதவர். ஏழைகளுக்கு உதவுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/geetha-radha-2025-09-22-15-35-20.jpg)
நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைத்துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு கீதா ராதாவின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக இருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/sarath-1-2025-09-22-15-35-36.jpg)
கீதா ராதாவின் மறைவுக்குத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/geetha-radha-2025-09-22-15-36-02.jpg)
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/sarath-2-2025-09-22-15-36-27.jpg)
கீதா ராதாவின் உடல், இன்று (செப்டம்பர் 22, 2025) மாலை 4:30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/geetha-radha-2025-09-22-15-37-13.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.