முதியோர்களின் நண்பனாக இருக்கும் முடக்கத்தான் கீரை பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ளதாலேயே இது முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது.