/indian-express-tamil/media/media_files/2025/08/22/screenshot-2025-08-22-170203-2025-08-22-17-02-16.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-1433490323-612x612-2025-08-22-17-03-06.jpg)
இன்றைய சூழலில் வாழ்வுத் தேவைகளுக்காக கடன் வாங்குவது இயல்பான ஒன்றாகியுள்ளது. வீடுமானது, வியாபார விரிவாக்கம், தொழிற்சாலை முதலீடு போன்ற பல காரணங்களுக்காக குடும்பங்கள் கடனை பயன்படுத்துகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-1330656686-612x612-2025-08-22-17-03-06.jpg)
வங்கிக் கடன்கள் சில நேரங்களில் பாதுகாப்பு இல்லாதவையாக இருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனை (PMMY) சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-2188497133-612x612-2025-08-22-17-03-06.jpg)
முத்ரா யோஜனையின் முக்கிய குறிக்கோள் விவசாயம் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதாகும். தனிப்பட்டவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுக்கு உட்பட்டு ₹10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-2148708716-612x612-2025-08-22-17-03-06.jpg)
முத்ரா யோஜனை பிணையம் மற்றும் செயலாக்க கட்டணமில்லாத, சிறு நிறுவனங்களுக்கு நிதி மற்றும் நிதி அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடிய கடன் வசதிகளை வழங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-1417212369-612x612-2025-08-22-17-03-06.jpg)
PMMY திட்டம் நான்கு பிரிவுகளில் கடன் வழங்குகிறது: தொடக்க வணிகங்களுக்கு ₹50,000 வரை ஷிஷு, வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ₹50,001 முதல் ₹5 லட்சம் கிஷோர், நடுத்தர வணிகங்களுக்கு ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் தருண், மற்றும் அதிக முதலீடு தேவைப்படும் வணிகங்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் தருண் பிளஸ்.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-1443237827-612x612-2025-08-22-17-03-06.jpg)
பண்ணை அல்லாத வருமானம் உள்ள 18-65 வயது இந்தியர்கள் இதற்கு தகுதி, கடன் வட்டி 7.30% தொடக்கம், திருப்பிச் செலுத்தும் வசதி 3-7 ஆண்டுகள் வரை உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-1346853640-612x612-2025-08-22-17-03-06.jpg)
சிறு வணிகங்களுக்கு பாதுகாப்பான, மலிவான கடன் வசதிகள் வழங்கி தொழில்முனைவோருக்கு உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1291984656-612x612-2025-07-17-22-50-35.jpg)
ஆதார், பான், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், முகவரிச் பில்கள், வாடகை ஒப்பந்தம், அரசு ஆவணங்கள், வணிக பதிவுச் சான்றிதழ்கள், GST சான்றிதழ்கள் மற்றும் 6 மாத வங்கி அறிக்கைகள் முக்கிய ஆவணங்கள் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1293189251-612x612-2025-07-17-22-50-35.jpg)
தகுதியான வங்கி அல்லது NBFCயின் அருகிலுள்ள கிளையை தேவையான ஆவணங்களுடன் அணுகி முத்ரா கடன் விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பி சமர்ப்பிக்கலாம். அல்லது உத்யம்மித்ரா போர்டல் அல்லது வங்கி வலைத்தளங்கள் (https://www.mudra.org.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகளும் தற்போது உண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1172767690-612x612-1-2025-07-17-22-50-06.jpg)
முத்ரா கடன்கள் சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றோருக்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்கி உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.