/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233742-2025-07-29-23-39-51.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233754-2025-07-29-23-40-05.png)
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்தது), வறுத்த அரிசி மாவு - 2 கப், தேங்காய் துருவல் - 1/2 மூடி, தேங்காய் பால் - 1 கப், பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), கறி மசாலா தூள் - 2 தேக்கரண்டி, தக்காளி - 2 (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233800-2025-07-29-23-40-05.png)
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவுடன், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், தக்காளி, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233814-2025-07-29-23-40-05.png)
பின்னர், சிறிது தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233822-2025-07-29-23-40-05.png)
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இறாலை சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233853-2025-07-29-23-40-05.png)
பின்னர், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233905-2025-07-29-23-40-05.png)
அடுத்து, கறி மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233926-2025-07-29-23-40-05.png)
வதக்கிய இறாலுடன், பிசைந்த மாவு உருண்டைகளை சேர்த்து, தேங்காய் பால் ஊற்றி, மூடி போட்டு வேகவிடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-233742-2025-07-29-23-39-51.jpg)
நன்றாக வெந்ததும், இறால் தக்கடி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.