/indian-express-tamil/media/media_files/2025/06/17/f4jIea4W4csnqp1jTboK.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/13/swOi0VfCKoPCpSQ8UpTU.jpg)
உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று துவங்கியது.
/indian-express-tamil/media/media_files/2025/06/13/8pyGziGQu1F7PWoqECRH.jpg)
நிகழ்ச்சியில், பாம்பு பிடி வீரர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக, நாகம் செயலியை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டு, பாம்பு பிடி வீரர்களுக்கான உபகரணங்களை வழங்கினார். மேலும், தமிழகத்தில் 'பரவலாக காணப்படும் பாம்புகள்' என்ற புத்தகம் மற்றும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/06/13/KC2dCcMBZmAyLSxXgm39.jpg)
சிலர் பாம்பை கொன்றால் பாவம் என கருதி அதற்காக தீயணைப்புத் துறை, வனத்துறை, பாம்பு பிடி வீரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக அகற்றி வனப்பகுதிகளுக்குள்ளும் விடுகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/fLeij7AZeMQp3ZHrKfMu.jpg)
இந்த நிலையில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாம்புகள் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்குள் வந்தால் எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த தகவல்களை அறிய வனத்துறை புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/hO13uKChNJ39hZtDyEA7.jpg)
கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற செயலி ஏற்கனவே உள்ளது. கேரள வனத்துறை அந்த செயலிக்கு “சர்ப'' என்று பெயரிட்டிருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/ya9WQdAD2JG9V0HEXczq.jpg)
அதேபோல், தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலிக்கு ‘நாகம்' என்று பெயர் சூட்டியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/3kB9Do0rqBExs97C0kH3.jpg)
உங்கள் வீட்டிலோ, நீங்கள் குடியிருக்கும் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ பாம்பை பார்த்தால் உடனடியாக நாகம் செயலி வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/VqFlnaFozhgLjIzScMcs.jpg)
இந்த புகார் கிடைத்த உடனே பாம்பு பிடி வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைவாக வந்து அதனை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு சென்று விடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.