/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155800-2025-08-18-15-59-22.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155809-2025-08-18-15-59-47.png)
இந்த நண்டு ரசம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, சளி இருமல் தொல்லை, ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமாக இந்த ரசம் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் நண்டு ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155814-2025-08-18-15-59-47.png)
தேவையான பொருட்கள்:
நண்டு - 1/4 கிலோ, சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3, பூண்டு - 4, இஞ்சி - சின்ன தூண்டு, கடுகு - 1/4 ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன், மிளகு - 1/4 ஸ்பூன், சோம்பு - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), உப்பு - சுவைக்கு ஏற்ப, தண்ணீர் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155820-2025-08-18-15-59-47.png)
நண்டு ரசம் செய்ய முதலில் எடுத்து வைத்த நண்டை தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155827-2025-08-18-15-59-47.png)
பிறகு அவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவி வைத்த நண்டை சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155836-2025-08-18-15-59-47.png)
பின் அதில் அறுத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். நண்ட்உ நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155851-2025-08-18-15-59-47.png)
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானது கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை நண்டுடன் சேர்த்து கலக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி பரிமாறுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-155800-2025-08-18-15-59-22.jpg)
அவ்வளவுதான் அட்டகாசமான சுகையில் நண்டு ரசம் தயார். இதை நீங்கள் சூப்பாக அப்படியே குடிக்கலாம் அல்லது சூடான சாதத்துடன் ஊற்றி சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.