/indian-express-tamil/media/media_files/2025/05/15/tKtBoFN7rxop5xEMcUXX.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/15/tXIP06IUUeOzEtXLzc66.jpg)
முருங்கையின் மருத்துவ குணநலன்கள் குறித்து தனித்தனியாகவே எழுதலாம். குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மை குறித்த விஷயங்கள் அனைத்துக்கும் முருங்கைக்காய் இன்றளவும் உதவியாகத்தான் இருக்கிறது. இந்த முருங்கை விதைகள் தயாரிப்பும் ஆண்களுக்கு பயன்படும் விதமும் குறித்து பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/15/nEgfCwcdR8f53fShyxfM.jpg)
முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக்காய் என்று அனைத்துமே சமைத்து சாப்பிடுகிறோம். முருங்கை இலையை பொடி செய்து சாப்பிடுவது போன்று முருங்கைக்காயில் இருக்கும் விதைகளையும் பொடியாக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/15/qp7cXpsJ97y0cnEkiiGS.jpg)
முருங்கைகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். அவை காயும் வரை உலர்த்த வேண்டும். அப்போதுதான் பொடிப்பதற்கு எளிதாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/fnfQbffBPioLn1fr0XZ4.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/15/3MQaYXF9Mf89ldDYE30L.jpg)
மற்றொரு வகை முருங்கை விதைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடியாக்காமல் எடுத்து வைக்க வேண்டும். தேவைப்படும் போது விதையை நெய்யில் வதக்கி பொடித்து பாலுடன் கலந்து காய்ச்சி குடுக்கலாம். இந்த முருங்கை விதை என்ன செய்யும் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/15/l6THeX6fG0JGnbB7gUW2.jpg)
முருங்கை விதைகளை ஆண்கள் எடுத்துகொள்ளும் போது இந்த புராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துகிறது. மேலும் முருங்கை விதையில் இருக்கும் குளிக்கோசினோலேட்ஸ் கந்தக சேர்மங்களை கொண்டிருப்பதால் இவை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்க கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.