/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-154733-2025-08-26-15-47-50.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/Ecu2hI6Wo6jURKqIxYnm.jpg)
வத்த குழம்பு என்றாலே எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வத்தக்குழம்பு சுவைக்கு ஈடு இணை எந்த குழம்பிற்கும் இல்லை என்று கூறலாம். சுண்ட சுண்ட வைத்த வத்தல் குழம்பு இன்னும் அதிக ருசியை தரும் என்பார்கள். புளியை ஊற்றி செய்யும் வத்தல் குழம்பு ஒரு வாரம் வரை கூட நாம் வைத்து சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155918-2025-08-26-16-00-24.png)
வத்தல் குழம்பு செய்ய பொதுவாக கடைகளில் விற்கும் மசாலா பொருளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் அரைத்த மசாலாவை கொண்டு வத்தல் குழம்பு வைத்தால் அதன் ருசி அலாதியானதாக இருக்கும். மணத் தக்காளி மற்றும் சுண்டைக்காய் வத்தல் போட்டு குழம்பு செய்யும் எளிய முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155922-2025-08-26-16-00-24.png)
தேவையான பொருட்கள்
வெந்தயம் – ¼ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 10, வத்தல் – ½ கப், உப்பு – தேவையான அளவு, தக்காளி – 3, மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், மிளகாய் தூள் – 11/2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 11/2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் – 1 கப், வெல்லம் – 2 துண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155928-2025-08-26-16-00-24.png)
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பல் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155934-2025-08-26-16-00-24.png)
இப்போது அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் புளி கரைசலை சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155948-2025-08-26-16-00-24.png)
இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குழம்பை கொதிக்க விடவும். பின்பு அதில் வெல்லத்தை சேர்த்து குழம்பை நன்கு கலந்து விடவும். இறுதியாக மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வத்தல்களை சேர்த்து நன்கு வறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-155958-2025-08-26-16-00-24.png)
வறுத்த இந்த வத்தல்களை குழம்பில் சேர்த்து கலந்து விடவும். சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் வத்தக் குழம்பு தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.