/indian-express-tamil/media/media_files/2025/01/20/kLkeUmTUyaOHj79mGCn1.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/20/hLecgUxwCA9K6jHIZWWe.jpg)
ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வீரர் இரண்டு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/XqdPDH3nHLOjibsezG6M.jpg)
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது திடீர் திருமண அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதையொட்டி, பல்வேறு தரப்பினரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/PfY6usP9bjLied5pGLJR.jpg)
தற்போது நீரஜ் சோப்ரா மற்றும் ஹிமானி மோர் தங்களது வாழ்க்கையை தொடங்கப்போகும் வீடு பற்றி பார்க்கலாம். நீரஜ் சோப்ராவின் பிரமாண்டமான மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட பங்களா 'வசுதைவ குடும்பகம்' ('உலகம் ஒரே குடும்பம்' என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/4dn4tEgW8p95IhBsQvvH.jpg)
நீரஜ் சோப்ராவின் மூன்று மாடி பங்களாவின் விலை சுமார் ரூ.30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது
/indian-express-tamil/media/media_files/2025/01/20/IdDKahsC3oykaGAm8tlI.jpg)
நீரஜ் சோப்ராவின் பெற்றோர் சரோஜ் தேவி மற்றும் சதீஷ் சோப்ரா தற்போது இந்த பங்களாவில் தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் விவசாயிகள். இந்தப் பங்களா பானிபட்டில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள கந்த்ராவில் அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/zvJN4YK9xAbkl0w9UZm6.jpg)
நீரஜ் சோப்ராவின் வீட்டில் அவரது சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் அதிகளவில் உள்ளன. ரூ.2 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரூ.93 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங் ஜி.டி கார்கள் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/zSQ9AOh69gNBRau8K6cU.jpg)
நீரஜ் சோப்ராவின் வீட்டில் அழகுபடுத்தப்பட்ட தோட்டம் உள்ளது. அங்கு அவரும் அவரது மனைவி ஹிமானி மோரும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்து பேசிக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/4o89RtEwmgOHUbmBPjW4.jpg)
நீரஜ் சோப்ரா தனது பங்களாவில் ஒரு பெரிய டிராக்டரை வைத்துள்ளார். அவர் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அதனை வயலில் ஓட்டிச் செல்வார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/20/McNMMnsH5ytCzTvswXCt.jpg)
நீரஜ் சோப்ரா மற்றும் ஹிமானி மோர் ஆகியோர் தங்களுடைய பங்களாவில் பெரிய பிளாட்-ஸ்கிரீன் டி.வியுடன் ஓய்வெடுக்க ஒரு பெரிய படுக்கையறை உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.