/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184114-2025-08-23-18-43-07.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184044-2025-08-23-18-43-22.png)
இது குறிப்பாக தமிழ் மக்கள் பலர் விரும்பும் ஒரு பாரம்பரிய ஸ்நாக் ஆகும். அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184151-2025-08-23-18-43-22.png)
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப், தண்ணீர் – 1 ¼ கப், உப்பு – 1/4 டீஸ்பூன், நெய் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி (விருப்பப்படி), கடுகு – 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – சிட்டிகை, கறிவேப்பிலை.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184159-2025-08-23-18-43-22.png)
ஒரு கடாயில் தண்ணீர், உப்பு மற்றும் 1 மேசைக்கரண்டி நெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும், அரிசி மாவை மெதுவாக தூவி கலந்து விடவும். (கட்டி ஏற்படாமல் கலக்கவும்).
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184208-2025-08-23-18-43-22.png)
சற்று அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவு கெட்டியாகும் வரை கிளறவும். மாவு புட்டு போல கெட்டியாக வேண்டும். மாவு ஆறியதும், சிறிய சிறிய உருண்டைகள் போல உருட்டிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நீளமாகவும் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184243-2025-08-23-18-43-22.png)
ஒரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184252-2025-08-23-18-43-22.png)
தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது பிசைந்து வைத்த மாவு உருண்டைகள் சேர்த்து மெதுவாக கலக்கவும். 5–6 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி நெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-184114-2025-08-23-18-43-07.jpg)
அவ்வளவு தான்... அருமையான சூடான நெய் கொழுக்கட்டை தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.