கிவி பழத்தை விட 3 மடங்கு இந்த சத்து கிடைக்கும்... நெல்லியில் இப்படி சட்னி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்
ஒரு கிவி பழத்தின் விலை ரூ.60. கிவி பழத்தை விட நெல்லிக்காயில் 3 மடங்கு அதிக வைட்டமின் சி இருக்கிறது என்று சித்து மருத்துவர் சிவராமன் விரிவிவாக இந்த பதிவில் விளக்கியுள்ளார்.
ஒரு கிவி பழத்தின் விலை ரூ.60. கிவி பழத்தை விட நெல்லிக்காயில் 3 மடங்கு அதிக வைட்டமின் சி இருக்கிறது என்று சித்து மருத்துவர் சிவராமன் விரிவிவாக இந்த பதிவில் விளக்கியுள்ளார்.
ஒரு பொருள் இரண்டு ஆயிரம் வருடமாக பேசு பொருளாக இருக்கிறது என்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக இருக்கும். அந்த வகையில், எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய பொருள் நெல்லிக்காய் என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
2/7
கிவி பழத்தை விட நெல்லிக்காயில் 3 மடங்கு அதிக வைட்டமின் சி இருக்கிறது. கிவி பழத்தில் இல்லாத பல பைட்டோ கெமிக்கல்கள் இருக்கிறது என்கிறார்.
3/7
அந்த வகையில், ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ள நெல்லிக்காயில் சுவையான துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
Advertisment
4/7
நெல்லிக்காய் துவையல் - தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1
நெல்லி -2
புளி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
5/7
முதலில் இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். இதன்பிறகு, தன்னை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
6/7
இதன்பின்னர், ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதனுடன் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வர மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
Advertisment
Advertisements
7/7
தொடர்ந்து, நறுக்கி வைத்துள்ள நெல்லி, புளி, தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இவற்றை அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். இவற்றுடன் வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்த தாளிப்பு சேர்த்து விட்டால் ருசியான நெல்லிக்காய் துவையல் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news