சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்... இரண்டுக்கும் பொதுவான குணங்கள் நிறைய உண்டு. ஆனால், பெரிய வெங்காயத்தைவிட சிறிய வெங்காயத்தில் வீரியம் அதிகம்.
கசப்பும், காரமும் சேர்ந்த சுவையும், மிகுந்த நெடியும் வாசனையும் உள்ள வெங்காயத்தில் ‘அலிசின்’ என்ற வேதிபபொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. வெங்காயத்தை வேக வைத்தாலும் இதன் மருத்துவ குணங்கள் மாறாதது இன்னும் சிறப்பு.
சிறிய வெங்காயத்திலிருந்து 5 மில்லி அளவுக்கு அரைத்து எடுத்த சாற்றை, மோர் அல்லது தேனோடு கலந்து தினமும் குடித்தால், அதிகப்படியான கொழுப்பால் ஏற்படும் இதய அடைப்புப் பிரச்னையிலிருந்து நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாம்.
பெரிய வெங்காயம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது. அதிக உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட, இந்த வெங்காயம் சிறிதளவு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமடையும். பெரிய வெங்காயத்துடன், தக்காளி, கோஸ், போன்றவற்றைச் சேர்த்து சாலட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன. சர்க்கரை நோய், இதயப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தாராளமாகச் சாப்பிடலாம்.
சிறுநீரகக் கோளாறு, அல்சரால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதுபோன்ற சில உடல்நலக் காரணங்கள் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து வெங்காயத்தைச் சமையலில் குறைத்துக்கொள்ளலாம், ஆனால் தவிர்க்கக் கூடாது
ஆண்மை குறைவு என்று வருத்தப்படும் பலரும், புதுமணத் தம்பதியினரும், சர்க்கரை வியாதியினரும் பாதாம், முந்திரி தான் சாப்பிட வேண்டும் என்றில்லாமல் தினமும் ஒரு கிண்ணம் வெங்காய பச்சடி சேர்த்து வந்தாலே போதும் அவர்களுக்கு ஆண்மை பலப்பட்டு ஆரோக்கியத்தை கூட்டும். இது எளிய சித்த மருத்துவ முறை,.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.