/indian-express-tamil/media/media_files/2025/06/08/r0gwceu3a0EYkru6dg9c.jpg)
ஒரே காதல் படம்; தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் ஆன நடிகர்: இந்த சிறுவன் இப்போ எல்.சி.யூ வில்லன்!
/indian-express-tamil/media/media_files/2025/06/08/pTCOHCmfw1nRD3QLqB1G.jpg)
பிரபல நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களைப் பார்ப்பதே சுவாரஸிமயானது. அவர்களின் உருவத் தோற்றங்கள், மாற்றங்களும் நம்மை வியக்க வைக்கும். அப்படியொரு மலையாள பிரபல நடிகரின் குழந்தை பருவ கியூட்டான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்க இருப்பது.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/r0gwceu3a0EYkru6dg9c.jpg)
பக்கத்து வீட்டு பையன் தோற்றம், சாக்லேட் பாய் என புகழப்பட்டவர். தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். 2 கேரள அரசின் விருதுகளையும், 3 பிலிம்ஃபேர் விருதுகளையும், 6 சைமா விருதுகளையும் வென்றவர். பெண்களின் ‘க்ரஷ்’ மெட்டிரியலுக்கு சொந்தக்காரர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/pTCOHCmfw1nRD3QLqB1G.jpg)
குறும்படங்களில் நடித்து வந்தவர், பின்பு அதே இயக்குநர் நட்பின் மூலம் படங்களில் அடியெடுத்து வைத்தார். மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவரது படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/r0gwceu3a0EYkru6dg9c.jpg)
சமீபத்தில் கூட இவரது படம் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும், மலையாள நடிகர்கள் சிலர் மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம். அப்படியான ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/nivin-pauly.jpg)
அவர்தான் நிவின் பாலி. ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களின் மூலம் கவனம் பெற்றவர், அடுத்து அவரது நடிப்பில் ‘ஏழு மலை ஏழு கடல்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு நிவின் பாலிக்கென தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
/indian-express-tamil/media/media_files/eSXV26dhtaE9IBxkP1Dy.jpg)
நிவின் பாலியின் குழந்தைப் பருவ மற்றும் இளமைப் பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.