/indian-express-tamil/media/media_files/2025/06/16/I053RDui1MYF5P9axbOI.jpg)
/indian-express-tamil/media/media_files/I3A7XttHlxAddVzFCLJ9.jpg)
மூளைக்கு வேலை தரும் புதிர்கள் என்றாலே ஒரு ரகசிய குறியீட்டை உடைப்பது, ஒரு தவறை அல்லது மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பது அல்லது ஒரு படத்தின் குறையைக் கண்டறிவது எனப் பல வடிவங்களில் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/wBAF6aRdZYktiYvvKihl.jpg)
இத்தகைய செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவது, சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துவதோடு, மூளைக்கு ஒரு பயனுள்ள மனப் பயிற்சியையும் அளிக்கிறது. அதே நேரத்தில் இவை பொழுதுபோக்காகவும் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/NnqIC1WGgnL2SruKs4i7.jpg)
மூளைக்கு வேலை தரும் புதிர்களில், கணித புதிர்களும் ஒரு வகையானது. இது எண்கள் மூலமாக நமது மூளையின் செயல்பாடுகளை பரிசோதிக்க உதவி செய்கிறது. இதன் காரணமாக இணையத்தில் இத்தகைய புதிர்கள் அதிகம் உலா வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/06/16/I053RDui1MYF5P9axbOI.jpg)
அந்த வகையில், இந்த புகைப்படத்தில் ஒரு கணித புதிர் இடம்பெற்றுள்ளது. இதற்கான விடையை உங்களால் 4 விநாடிகளில் கண்டறிந்து கூற முடியுமா? அப்படி கூறினால் உண்மையிலேயே நீங்கள் கணக்கில் புலி தான்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/RcpgUnV7zwecgsu0oWx8.jpg)
எனினும், விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனை, இப்பதிவில் நாங்களே குறிப்பிட்டு இருக்கிறோம். தேனீ + தேனீ + தேனீ = 12 - ஆகவே, தேனீ = 4; தேனீ + நத்தை + நத்தை = 10; 4 + 2 நத்தை = 10; 2 நத்தை = 10 - 4; 2 நத்தை = 6; ஆகவே, நத்தை = 3; நத்தை + பறவை + பறவை = 13; 3 + 2 பறவை = 13; 2 பறவை = 13 - 3; 2 பறவை = 10; ஆகவே, பறவை = 5; இப்போது நாம் ஒவ்வொன்றின் மதிப்பையும் அறிந்திருப்பதால், நத்தை * பறவை * நத்தை = 3 * 5 * 3 = 45
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.