/indian-express-tamil/media/media_files/2025/07/28/ranjhana-and-3bhk-2025-07-28-17-28-30.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/28/coolie-2025-07-28-17-28-44.jpg)
சினிமா ரசிகர்களுக்கு வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பெரிய விருந்து காத்திருக்கிறது என்று கூறலாம். ஏனெனில், அன்றைய தினத்தில் திரையரங்கம் மற்றும் ஓடிடி என மொத்தம் 14 படங்கள் வெளியாகின்றன. ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் காரணத்தால் அதற்கு முன்பாக, பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதியை குறிவைத்து களமிறங்குகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/07/28/raanjhana-2025-07-28-17-29-04.jpg)
அந்த வகையில், தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஞ்சனா'-வின் தமிழ் பதிப்பான 'அம்பிகாபதி'-யும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இது தவிர 'அக்யூஸ்ட்', 'முதல் பக்கம்', 'போகி', 'மீஷா', 'உசுரே', 'சரண்டர்', ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'பிளாக்மெயில்', 'ஹவுஸ்மேட்ஸ்', புகழ் நடிப்பில் உருவான 'மிஸ்டர் ஜூ கீப்பர்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இது தவிர ஜூலை 31-ஆம் தேதி விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படம் ரிலீஸாகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/28/love-marriage-2025-07-28-17-29-18.jpg)
மேலும், ஓடிடியில் திரைப்படங்களை கண்டு மகிழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற வகையில் முக்கியமான நான்கு திரைப்படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன. அதன்படி, விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'லவ் மேரேஜ்' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/28/paranthu-po-2025-07-28-17-29-38.jpg)
ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான 'பறந்து போ' திரைப்படம், ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குழந்தைகள் மற்றும் இளம் பெற்றோர்கள் இடையே இருக்கும் உறவுமுறை குறித்து பேசிய இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2025/07/28/phoenix-and-3bhk-2025-07-28-17-29-55.jpg)
மேலும், சித்தார்த், சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான '3BHK' படம் அமேசான் பிரைம் தளத்திலும், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமான 'பீனிக்ஸ் வீழான்' திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.