முதலில் இரண்டு கப் பச்சரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். கழுவி எடுத்த பின்பு ஒரு தட்டை வைத்து மூடி வைக்க வேண்டும். இது ஒரு நான்கு மணி நேரம் ஊற வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து அரிசி நன்கு ஊறிய பின்பு தண்ணீரை வடித்து எடுத்து மிக்சியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். நன்கு வழுவழுவென்று அரைக்க வேண்டும்.