New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/11/neelambari-2025-07-11-12-51-54.jpg)
அமிதாப், ஷாருக்குடன் ஆட்டம் போட்டவரா நம்ம நீலாம்பரி? இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க; வைரல் போட்டோ!
பாலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ரொமான்டிக் காட்சிகளிலும் துணிச்சலான வேடங்களிலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மை.
அமிதாப், ஷாருக்குடன் ஆட்டம் போட்டவரா நம்ம நீலாம்பரி? இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க; வைரல் போட்டோ!
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். கம்பீரமான அரசியாக காட்சியளித்த ரம்யா கிருஷ்ணன், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ரொமான்டிக் காட்சிகளிலும் துணிச்சலான வேடங்களிலும் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மை.
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் உயிரூட்டினார். அவரது கண் அசைவுகள், மிரட்டும் பார்வை, வசன உச்சரிப்பு, கம்பீரமான நடை என ஒவ்வொன்றும் நீலாம்பரி கதாபாத்திரத்தை மிகவும் வலுவானதாக மாற்றியது. சூப்பர் ஸ்டாருக்கு ஈடாக, எதிர்மறையான கதாபாத்திரத்தில் நின்று நடித்தது ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகும்.
1993-ல் யாஷ் சோப்ராவின் 'பரம் பரா' படத்தின் மூலம் ரம்யா கிருஷ்ணன் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, சுபாஷ் கையின் 'கல்நாயக்', மகேஷ் பட்டின் 'சாஹத்', டேவிட் தவானின் 'பனாரசி பாபு', அமிதாப் பச்சன் மற்றும் கோவிந்தாவுடன் இணைந்து 'படே மியான் சோட்டே மியான்', மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைந்து 'ஷபத்' உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.
'படே மியான் சோட்டே மியான்' படத்தில் அமிதாப் பச்சன், கோவிந்தா, ரவீனா டாண்டன் ஆகியோருடன் ரம்யா திரையைப் பகிர்ந்து கொண்டார். 'பரம் பரா' படத்தில் அமீர் கான், சைப் அலி கான், சுனில் தத் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், வினோத் கன்னாவுடன் ரம்யா சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினார். 'சாஹத்' படத்தில்தான் ஷாருக் கானுடன் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.