/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153339-2025-07-30-15-43-39.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153348-2025-07-30-15-43-52.png)
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து சதுரமாக நறுக்கியது), பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீ,ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், தனியா தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், தேங்காய் பால் - 1/2 கப் (முதல் பால்), தண்ணீர் - தேவையான அளவு, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153356-2025-07-30-15-43-52.png)
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153403-2025-07-30-15-43-52.png)
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153416-2025-07-30-15-43-52.png)
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153422-2025-07-30-15-43-52.png)
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153441-2025-07-30-15-43-52.png)
வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153451-2025-07-30-15-43-52.png)
கரம் மசாலா சேர்த்து கிளறவும். தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153500-2025-07-30-15-43-52.png)
கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-153514-2025-07-30-15-43-52.png)
அவ்வளவு தான்... உருளை பட்டாணி குருமா தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.