/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-174622-2025-07-10-17-46-48.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/20/kushboo-photos7-559189.jpg)
இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/16/Yt8O2HaXEGv4Yd4HE38e.jpg)
கொண்டையில் தாழம்பூ...கூடையில் வாழப்பூ... நெஞ்சிலே என்னப்பூ குஷ்பூ.. என்ற பாட்டு கேட்டு ஆட்டம் போடாத 90ஸ் கிட்டுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . சினிமாவில் பீக்கில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார் குஷ்பு.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-174629-2025-07-10-17-48-12.png)
இந்நிலையிவ்,குஷ்பூவின் இளைய மகள் அவந்திகா யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நானும் என்னுடைய அக்கா இரண்டு பேருக்கும் சினிமா மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அக்காவுக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறாள். இதற்காக லண்டனில் நடிப்பு தொடர்பான படிப்பையும் படித்தார். எனக்கு தயாரிப்பு தரப்பில் எனக்கு ஆர்வம் அதிகம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-174856-2025-07-10-17-49-26.png)
தொடர்ந்து பேசிய அவந்திகா, நான் என்னுடைய சிறு வயதில் உடல் எடை அதிகரித்து இருந்தேன். அதை ஒரு போதும் குறையாக என் வீட்டில் யாரும் சொன்னதில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் அனைவருமே அப்படிதான் இருப்பார்கள். ஆனால், சமூக வலைத்தள பக்கத்தில் பலர் என்னை உருவகேலி செய்தனர். என்னால் அவர்களின் கேலி பேச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இது மன அழுத்தத்தில் கொண்டு போய்விட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-174903-2025-07-10-17-49-26.png)
இதையடுத்து, உணவு கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி செய்து மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடை குறைத்து இருக்கிறேன். இப்போழுதும், உடல் எடை குறைத்தது குறித்து பாராட்டாமல், பலர் என்னிடம் 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இதை கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-174915-2025-07-10-17-49-26.png)
16 வயதில் எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது என்று அறிவு கூட இல்லாமல் கேட்கிறார்கள் என்று குஷ்புவின் மகள் அவந்திகா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.